• Mon. May 4th, 2026

” கோட்டா கோ கம” குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் புதிய பிரதமர் ரணில் 

Byadmin

May 12, 2022

கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் என புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

இதனையடுத்து மதவழிபாடுகளில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“ கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் . நாடு கட்டியெழுப்பப்பட்டு இளம் தலைமுறையினருக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும்.

ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்படும் எனவும் நாளை அமைச்சரவை நியமிக்கப்படாது எனவும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *