• Sun. May 3rd, 2026

எரிபொருள் இன்றி வீதிகளில் நின்ற வாகனங்கள்

Byadmin

May 18, 2022

எரிபொருள் தீர்ந்து போன காரணத்தினால், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல பெட்ரோல் வாகனங்கள் நாடு முழுவதும் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறிப்பாக கொழும்பு உட்பட அதன் புறநகர் பகுதிகளில் இந்த நிலைமையை பெரும்பாலும் காண முடிகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் மழைக்கு மத்தியில் அவற்றை எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தோக்கி தள்ளிச் செல்வதை காணக் கூடியதாக உள்ளது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வரையறுக்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கின்றனர்.

கொழும்புக்கு வெளியில் பல பிரதேசங்களுக்கு நேற்று எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்றைய தினம் பெட்ரோல் விநியோகிக்கப்பட மாட்டாது என்பதால், வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *