• Mon. Apr 6th, 2026

SJB, JVP புறக்கணிப்பு – அமர்வு நாளும் குறைப்பு

Byadmin

Jun 21, 2022

மக்களுக்கு வாழமுடியா நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. 225 பேரும் பொறுப்பு கூறவேண்டும். கள்வர்களே இந்த அரசாங்கத்துக்குள் இருக்கின்றனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அரசாங்கத்துக்கு தெரியவில்லை. ஆகையால், துன்பப்படும் மக்களுடன் நாங்கள் கைகோர்க்கின்றோம்.

ஆகையால், இந்தவார சபை அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கிறது என்றார்.

2

இந்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை. மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால், அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கிவிட்டு, இவ்வாரம் சபை அமர்வை நாங்களும் புறக்கணிக்கின்றோம் என ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பியுமான அனுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.

3

இவ்வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வு நாள்கள் குறைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாளைய (22) தினம் மட்டுமே பாராளுமன்றம் நடைபெறும். நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டே இவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *