• Mon. Apr 6th, 2026

வீடுகளுக்கே எரிபொருள் கொண்டுவந்து தரும் சட்டவிரோத வர்த்தகம்

Byadmin

Jun 21, 2022

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத தற்போதைய சூழ்நிலையில், மற்றுமொரு எரிபொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வீடுகளுக்கே எரிபொருளை கொண்டு வரக்கூடிய வகையிலான வர்த்தகம் ஒன்று இடம்பெறுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் யூ.எஸ்.எஸ் பெர்னாண்டோ Hiru க்கு தெரிவித்தார்.

அவ்வாறு வழங்கப்படும் எரிபொருட்களின் தரம் தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த சட்டவிரோத வர்த்தகம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *