• Tue. Apr 7th, 2026

குழந்தை பாக்கியம் இல்லையா?

Byadmin

Jun 16, 2022

• குழந்தை பாக்கியம் அல்லாஹ்வின் மிக பெரிய அருள் ஆகும்!

• அனைவருக்கும் இது கிடைத்து விடுவது கிடையாது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டும் தான் இதை வழங்குகிறான்!

• நமக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தாலும் அதில் நமக்கு நலவு உள்ளது கிடைக்க வில்லை என்றாலும் அதிலும் நமக்கு நலவு உள்ளது!

~ ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும்.

~ ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும்.

~ அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல் குர்ஆன் 2:216)

💟 குழந்தை பாக்கியம் பெற அல் குர்ஆனில் உள்ள அழகிய துஆக்கள் :

❤️ நபி ஜக்கரியா (அலை) அவர்கள் கேட்ட துஆ :

رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيّகொள்ளுங்கள்َةً‌ ‌ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏

ரப்பி ஹப்லீ மின்(ல்)லதுன்(க்)க துர்ரிய்யதன் தய்யிபதன் இன்னக ஸமீஉத் துஆ

பொருள் : இறைவனே ! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்!

(அல்குர்ஆன் : 3:38)

❤️ நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட துஆ :

رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ‏

ரப்பி ஹப்லீ மினஸ் ஸாலிஹீன்

பொருள் : என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக!

(அல்குர்ஆன் : 37:100)

❤️ நபி ஜக்கரியா (அலை) அவர்கள் கேட்ட துஆ :

رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَ‌ ‌‏

ரப்பி லா ததர்னீ ஃபர்தன் வ அன்த்த ஃகைருல் வாரிஸீன்

பொருள் : என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்!

(அல்குர்ஆன் : 21:89)

• இந்த துஆக்களை கேளுங்கள் மற்றும் பொதுவாக உங்கள் மொழியில் துஆ செய்யுங்கள்!

💟 அதிகம் தவ்பா செய்யுங்கள் :

• நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்!

• (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்!

• அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.

(அல்குர்ஆன் : 71 : 10 & 12)

💟 அல்லாஹ்வின் அருளில் ஒரு போதும் நம்பிக்கை இழந்து விடாதீர்கள் :

• குழந்தை பாக்கியம் சிலருக்கு திருமணம் ஆன சில மாதங்களில் கிடைத்து விடும் ஆனால் இன்னும் சிலருக்கு கால தாமதம் ஆகலாம்!

• ஏன் அல்லாஹ் நமக்கு கொடுக்க வில்லை என்று கவலை படுவதை விட இந்த நேரத்தில் அல்லாஹ் நமக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க வில்லை என்றால் அதிலும் ஒரு நன்மை உண்டு என்று உணர்ந்து கொள்ளுங்கள்!

• ஏன் என்றால் அல்லாஹ்விற்கு மட்டுமே மறைவானதை அறிந்தவன்!

உதாரணமாக :

• நபி ஜக்கரியா (அலை) அவர்களுக்கு நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வயதான காலத்தில் தான் குழந்தை பாக்கியம் கொடுத்தான்!

• குழந்தை பாக்கியம் அல்லாஹ்விடம் உள்ளது நபி மார்க்களாக இருந்தாலும் அல்லாஹ் அவர்களுக்கு உடனடியாக கொடுக்க வில்லை தாமதம் படுத்தியே கொடுத்தான்!

• நபி மார்கள் நம்பிக்கை இழக்காமல் அவர்கள் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை உடன் துஆ செய்தார்கள்! அல்லாஹ் அவர்கள் ஸாலிஹான பிள்ளைகளை கொடுத்தான்!

• இதை பற்றி அல்லாஹ் விரிவாக சூரா மர்யமில் – 2 முதல் 15 வசனங்களில் கூறி உள்ளான்! இன்னும் சூரா இப்ராஹிமில் – 14 : 39 வசனத்தில் கூறி உள்ளான்!

• திருமணம் ஆகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்று அல்லாஹ்வின் அருளில் ஒரு போதும் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்!

• தொடர்ந்து உறுதியாக துஆ செய்து கொண்டு இருங்கள் அல்லாஹ் நாடினால் நமக்கு நாம் கண் இமைக்கும் நேரத்தில் குழந்தை பாக்கியம் கொடுக்க முடியும்!

💟 மருத்துவம் பார்க்கலாம் :

• சிலருக்கு உடலில் ஏதேனும் மருத்துவ பிரச்சனை இருந்தால் சிகிச்சை எடுக்க முயற்சி செய்யுங்கள்!

💟 குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் என்று யாரையும் குறை கூறி விடாதீர்கள் :

• குழந்தை பாக்கியம் ஒருவருக்கு அவரின் முயற்சியின் காரணமாக ஒன்றும் கிடைத்து விடாது அல்லாஹ்வின் நாட்டம் வேண்டும்!

• குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ்விடம் உள்ளது அவன் நடியவர்களுக்கு ஓரு குழந்தை இன்னும் சிலருக்கு பல குழந்தை இன்னும் சிலருக்கு பெண் குழந்தை மட்டும் இன்னும் சிலருக்கு ஆண் குழந்தை மட்டும் இன்னும் மலடி ஆகவும் ஆக்குகிறான்!

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.

அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.

(அல்குர்ஆன் : 42 : 50 & 51)

• அல்லாஹ் பாதுகாக்கணும்! இன்றும் பல ஊர்களில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களை நவதுபில்லாஹ் எவ்வளவு இழிவாக பேசுகிறார்கள்!

• இன்னும் சில ஊர்களில் ஆண் குழந்தை இல்லை பெண் குழந்தை மட்டும் என்றால் அதற்கும் அவ்வளவு அவதூறு இழிவான பேச்சு பேசுகிறார்கள்! இன்னும் சில ஊர்களில் ஆண் குழந்தை மட்டும் தான் பெண் குழந்தை இல்லை என்றால் அதற்கும் அவ்வளவு அவதூறு இழிவான பேச்சு பேசுகிறார்கள்!

அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் ☝🏻

• குழந்தை பாக்கியம் அல்லாஹ்விடம் உள்ளது நாடியவர்களுக்கு வழங்குகிறான் இன்னும் தான் நாடியவர்களுக்கு கொடுக்காமலும் இருக்கின்றான் அது அவனுடைய விருப்பம்!

• நீங்கள் குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏசுவது குத்தி காட்டி பேசுவது அனைத்துமே படைத்த இறைவனை பேசுவதற்கு சமம் ஆகும் காரணம் அவர்களுக்கு கொடுத்தும் அல்லாஹ் தான் தடுத்ததும் அல்லாஹ் தான் இதில் மனிதனுக்கு எந்த பங்கும் இல்லை!

• படைப்புகளை அவதூறு கூறுவது குத்தி பேசுவது! அனைத்துமே படைத்த இறைவனை குறை கூறுவதற்கு சமம் ஆகும்!

• படைப்புகள் விட்டாலும் நம்மை படைத்தவன் விட மாட்டான் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் ☝🏻

💟 குழந்தை பாக்கியம் பற்றி கட்டுக்கதைகள் :

• அல்லாஹ் பாதுகாக்கணும் மார்க்க விளக்கம் இல்லாத மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்!

• நிறைய கட்டுக்கதைகள் இட்டுக்கப்பட்ட செய்திகள் இதிலும் உள்ளது!

• சூரா மர்யம் தினமும் பஜ்ர் பின்பு ஓதினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று இந்த சூராவை மட்டும் வைத்து 10 க்கும் அதிகமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் கூறி உள்ளார்கள்!

• இன்னும் சிலர் தினம் யாஸீன் சூரா ஓதுங்கள் இன்னும் சிலர் தர்ஹாவிற்கு செல்லுங்கள் நவதுபில்லாஹ் இப்படி எல்லாம் இஸ்லாம் கட்டிதாராத எல்லாம் மக்களிடம் கூறி ஏமாற்றுகிறார்கள்!

• மார்க்கத்தின் பெயரால் இட்டகட்ட கூடியவர்களே அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *