அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் யோசனை இன்று அமைச்சரவையில்
சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றால், அரச பிரிவுகளுக்கு நான்கு நாட்கள் மாத்திரமே வேலைநாட்களாக வழங்கப்படும். அனுமதி கிடைத்தால், அதனை இந்த வாரத்திலேயே அமுல்படுத்தப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சுகாதாரம், கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த நடவடிக்கை உரித்தாகாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.