• Tue. Apr 7th, 2026

QR முறைமையில் சுமார் 50 இலட்சம் வாகனங்கள் பதிவு

Byadmin

Aug 2, 2022

நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டையூடான கியூ.ஆர் முறைமைக்கு சுமார் 50இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளத்தினூடாக மாத்திரம் பதிவு செய்யுமாறும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கியூ.ஆர். குறியீட்டின் மூலம் எரிபொருளை விநியோகிக்கும் நடைமுறை நேற்று (01) முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *