• Tue. Apr 7th, 2026

டலஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் அமரப் போகும் 16 பேர்

Byadmin

Jul 24, 2022

ஜனாதிபதியை தெரிவு செய்ய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தனியான அணியாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

இந்த அணியில் பொதுஜன பெரமுனவை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவதாக தெரியவருகிறது.

ஜீ.எல்.பீரிஸ் உட்பட முக்கிய பிரமுகர்கள் டளஸ் அணியில் டலஸ் அழகப்பெரும தலைமையிலான இந்த அணியில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் சன்ன ஜயசுமண, கலாநிதி நாலக கொடஹேவா உள்ளிட்டோரும், பொதுஜன பெரமுனவின் மனசாட்சிப்படி செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *