• Tue. Apr 7th, 2026

ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டேன் – போராட்டக் குழுவுடன் சஜித் சந்திப்பு

Byadmin

Jul 18, 2022

போராட்டத்திற்கு தாம் ஒரு போதும் துரோகம் இழைக்கவில்லை எனவும் எதிர்காலத்திலும் அந்நிலைப்பாடு மாறாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

குடிமக்கள் போராட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவ் வாரத்தினுள் இடைக்கால ஜனாதிபதியை நியமிக்கும் பணி இடம் பெறவுள்ளதோடு, போராட்டத்தில் குடிமக்கள் குழுவினரால் தங்கள் நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.

தானோ அல்லது தனது கட்சியோ அல்லது தனது கூட்டணியோ ஒருபோதும் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு துரோகம் செய்யவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,எதிர்காலத்திலும் அவ்வாறு துரோகமிழைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *