• Tue. Apr 7th, 2026

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

Byadmin

Jul 8, 2022

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தடையுத்தரவு ஒன்றை கோரி பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவினுள் அமைந்துள்ள சில வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்றை வௌியிடுமாறு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

கருவாத்தோட்டம் பொலிஸினால் இந்த கோரிக்கை இன்று -08- கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றம் குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *