பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு இந்தியா உதவுவதாக அறிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசியாவில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அண்டை நாடுகள் பிராந்தியத்தின் ஒருங்கிணைப்பில் முன்னணி வகிக்க விரும்புவதாகவும் ஜெய்சங்கர் கூறினார்