• Wed. Apr 8th, 2026

மரணத்திலும் இணைபிரியாத தம்பதி – குருதெனியவில் சம்பவம்

Byadmin

Sep 3, 2022

திருமணமாகி 60 வருடங்களான ஒரு தம்பதி ஒரே நாளில் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. 

குருதெனிய, தம்பாவெல பிரதேசத்திலேயே இச் சம்பவம் பதிவாகியுள்ளது. 88 வயதான ஆர்.ஏ.எஸ்.ரணசிங்க மற்றும் அவரது 81 வயதான மனைவி ஏ.ஜி. பண்டாரநாயக்க ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இராணுவத்தில் சேவையாற்றி 60 வருடங்களாக மனைவியுடன் வாழ்ந்து வந்த இவர் நேற்று முன்தினம் (30) காலை உயிரிழந்தார். கணவரின் மரணச் செய்தி கேட்டு வேதனையடைந்த மனைவியும் சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். மூன்று பிள்ளைகளின் தந்தை மற்றும் தாயான இந்த தம்பதியருக்கு பதினொரு பேரக்குழந்தைகள் உள்ளனர். மூத்த மகனும் இலங்கை பொலிஸ் தலைமைப் பரிசோதகராக உள்ளார்.

இந்தத் தம்பதியின் இறுதி சடங்குகள் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *