• Fri. Oct 24th, 2025

பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேயிலையை நன்கொடையாக வழங்கியது இலங்கை அரசு.

Byadmin

Sep 6, 2022

பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று (05) பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கியிடம், வெளிவிவகார அமைச்சில் வைத்து தேயிலை தொகையை கையளித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அமைச்சர் அனுதாபங்களை தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆதரவையும் ஒற்றுமையையும் அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *