• Sat. Oct 25th, 2025

பால் பக்கற் வாங்க பிச்சையெடுத்த பெண்

Byadmin

Sep 6, 2022

கைதுதுணியால் சுற்றப்பட்டு, தனது மார்பகங்களுடன் அணைத்து பொம்மையொன்றை வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பிள்ளைக்கு கொடுப்பதற்கு பால் தேவை, பால்பக்கற் வாங்குவதற்கு தேவையான பணத்தை திரட்டிக்கொள்ளும் நோக்கிலேயே, அந்தப் பெண், பொம்மையொன்றை துணியால் சுற்றிவைத்துக்கொண்டு, ரயில்களில் பிச்சையெடுத்துள்ளார்.

அவ்வாறு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே, மேற்படி பெண்ணை ரயில் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குழந்தையை துணியால் சுற்றியிருந்த விதம் மற்றும் அவ்வாறு இருந்தால், குழந்தைக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்படும் என்பதை உணர்ந்த ரயில் பாதுகாப்புப் பிரிவினர். அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர். அதன்​போதே, மேற்படி விவகாரம் அம்பலமானது.

கடுமையாக எச்சரித்த பாதுகாப்பு பிரிவினர். அப்பெண்ணை அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர்.

கோட்டை ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *