• Tue. Oct 21st, 2025

சௌதி அரேபிய இளவரசரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு

Byadmin

Sep 7, 2022

சவூதி அரேபியாவிற்கான ஜனாதிபதியின் தூதுவர் என்ற வகையில் சுற்றுசூழல் அமைச்சர் நசீர் அஹமட் கடந்த வாரம் சவூதி அரசாங்கத்துடன் அரசாங்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்காக ஐந்து வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கோரி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். 

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாக அமையும் என அரசு எதிர்ப்பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசேட தூதுவராக அமைச்சர் நசீர் அஹமட் இலங்கையில் விவசாய உரங்களை உற்பத்தி செய்தல், பெற்றோலிய சேமிப்பு வசதிகளை நிர்மாணித்தல், எரிபொருள் விநியோக நிலையங்களை நிறுவுதல், சுத்திகரிப்பு நிலையத்தை நவீனப்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல், கனிமங்களை அகழ்வதற்கான வாய்ப்புகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல் போன்றவற்றிற்காக சவூதி அரேபிய முதலீடுகளை முன்மொழிந்தார். 

கடந்த வாரம் ரியாத்தில் சவுதி அரேபிய துணை வெளிவிவகார அமைச்சர் வலீத் அல் குரைஜியுடனான சந்திப்பின் போது, ​​அமைச்சர் அஹமட், சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மானை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் விருப்பத்தை தெரிவித்தார். 

சவூதி அரேபிய ஆட்சியாளரின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக ஜனாதிபதி விக்ரமசிங்கவின் ரியாத் விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *