• Sat. Oct 11th, 2025

“நான் இஸ்லாத்தை நம்புகிறேன்” – உலக அழகி எஸ்மா

Byadmin

Jul 19, 2017

இஸ்லாத்தை நான் நம்புகிறேன், இஸ்லாம் உலக அமைதியை மட்டுமே கற்பிக்கிறது என்று உலக அழகி ஆஸ்திரேலியா 2017 எஸ்மா ஒலோடர் தெரிவித்துள்ளார்.

25 வயதான எஸ்மா ஒலோடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் உலக அழகி ஆஸ்திரேலியா 2017 பட்டத்தை பெற்றார். இவர் இந்த பட்டத்தை பெற்ற பின்பு தெரிவித்ததாவது:

“இஸ்லாம் குறித்து உலகம் முழுவதும் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நான் குர்ஆனை படித்துள்ளேன். அதில் எந்த இடத்திலும் தவறாக சொல்லப்படவில்லை. மாறாக உலக அமைதியையும், சமாதானத்தையும் ஒற்றுமையையும் மட்டுமே வலியுறுத்துகிறது.

ஒரு சிலர் செய்யும் தவறுக்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாகமுடியும்? அட்டூழியம் செய்பவர்கள் யாரானாலும் அட்டூழியம் செய்பவர்கள் மட்டுமே பொறுப்பாவார்கள். மாறாக அவர்கள் சார்ந்த சமூகத்தை குற்றம் சாட்டுவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான உலகத்தை உருவாக்க உறுதிமொழி எடுப்போம்”

இவ்வாறு எஸ்மா தெரிவித்தார்.

எஸ்மா ஒலோடர் அகதிகள் முகாமில் பிறந்தவர். போஸ்னியாவில் நடந்த போரில் அவரது பெற்றோர் இடம் பெயர்ந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்தபோது எஸ்மா ஒலோடர் பிறந்தார். பின்பு எஸ்மா குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்தனர்.

மனோதத்துவ நிபுணரான எஸ்மா ஒலோடர் தற்போது குற்றவியல் நிபுணராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

-அபுசாலி முகம்மட் சுல்பிகார் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *