• Thu. Oct 16th, 2025

என்மீது மக்களுக்கு நம்பிக்கையுள்ளது நான் செய்துமுடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

Byadmin

Sep 17, 2022

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு நான் தீர்வை காணவேண்டும்  என விரும்புகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏபிசியின் வெளிநாட்டு செய்தியாளருக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி  சர்வதேச நாணய நிதியத்தை நாடுகங்கள் என  நானே சரியான விடயங்களை தெரிவித்தேன்,இதன் காரணமாகவே என்னை ஆதரிப்பது குறித்து நம்பிக்கை காணப்படுகின்றது எனகுறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே என்மீது நம்பிக்கையுள்ளது நான் செய்துமுடிப்பேன் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க இல்லங்களை எரிப்பதன் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியின் இல்லத்தை ஆக்கிரமித்தவர்கள் அல்லது எனது வீட்டை எரித்தவர்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வை கண்டிருக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மீறியவர்களே கைதுசெய்யப்படுகின்றனர் இந்த கைதுகளை நான் செய்யவில்லை பொலிஸாரிடம் விட்டுவிட்டேன் உங்கள் நாட்டை போல பொலிஸார் அவர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்த திட்டமிட்டுள்ளனர் அனைத்தும் சட்டபூர்வமாக இடம்பெறுகின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *