• Tue. Oct 21st, 2025

நாட்டில் எனக்கு பெரும்பான்மையானோரின் ஆதரவு உள்ளது – ஜனாதிபதி ரணில்

Byadmin

Sep 18, 2022

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்திடம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ABC ஊடக வலையமைப்பின் ‘வெளிநாட்டு நிருபர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதியின் நேர்காணல் வருமாறு :

கேள்வி – அண்மைக்காலமாக பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். அது நெருக்கடியைத் தீர்க்குமா?

ஜனாதிபதி – அரச சொத்துக்களை எரிப்பதன் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் அலுவலகத்தைக் கைப்பற்றுவதன் மூலமோ,எனது வீட்டுக்கு தீ வைப்பதன் மூலமோ, பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றுவதன் மூலமோ அல்லது பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் ஒன்றிணைவதன் மூலமோ எங்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

கேள்வி – மக்களை கைது செய்வதன் மூலமோ அல்லது அவர்களை தடுப்பதன் மூலமோ இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

ஜனாதிபதி – சட்டத்தை மீறியவர்களை கைது செய்கிறோம். நான் அதைச் செய்பவன் அல்ல. உங்கள் நாட்டைப் போலவே, பொலிஸார் செய்கிறார்கள். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா என்பதை பொலிஸாரே தீர்மானிக்கின்றனர். அனைத்தும் சட்டப்படி செய்யப்பட்டுள்ளன.

கேள்வி – அருட்தந்தை ஜீவந்த, மாணவர் சங்கத் தலைவர் வசந்த போன்ற பலர்…

ஜனாதிபதி – இந்தச் சிறிய அளவிலான சம்பவங்களை என்னிடம் கேட்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் பெரும்பான்மைக்கு நான் பதில் சொல்கிறேன்.

கேள்வி – இந்த நிலையில் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வேதனையிலும் கோபத்திலும் உள்ளனர் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

ஜனாதிபதி – இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அவதியுறுகிறார்கள், அவர்களுக்கு தீர்வு தேவை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அல்ல.

கேள்வி – உங்கள் நாட்டில் உங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதா?

ஜனாதிபதி – நாட்டில். ஆம். IMFக்கு செல்வதுதான் சரி என நான் தான் சொன்னேன். அதனால் தான் எனக்கு ஆதரவளிக்கும் நம்பிக்கை உள்ளது. அதனால் தான் நான் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *