• Sat. May 2nd, 2026

பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்றுவந்த மாணவரை காணவில்லை

Byadmin

Oct 3, 2022

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்று வந்த மற்றுமொரு மாணவர் காணாமல் போயுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த மாணவரே காணாமல் போயுள்ளார்.

பல்கலையின் விடுதியிலிருந்து நேற்றிரவு வெளியேறிய குறித்த மாணவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடவத்தை கணேமுல்ல பகுதியை சேர்ந்த மாணவர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னதாக கலை பீடத்தில் கற்று வந்த மாணவர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் மகாவலி கங்கையிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *