• Tue. May 5th, 2026

வங்கியின் சுவரை உடைத்துக்கொண்டு உட்புகுந்த கார்

Byadmin

Oct 22, 2022

தனியார் வங்கி ஒன்றின் சுவரை உடைத்துக் கொண்டு இன்று (22) காலை 8 மணியளவில் சொகுசு கார் ஒன்று புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கஹவத்தை நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

விபத்தில் வங்கி கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வங்கியின் படிக்கட்டுக்கள் ஊடாக முன்னோக்கி சென்று வங்கியினுள் புகுந்துள்ளது.

குறித்த காரை பல் மருத்துவர் ஒருவர் செலுத்திச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *