• Sun. Oct 12th, 2025

இலங்கையர்களின் அடுத்த வருட சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள கவலைமிகு தகவல்

Byadmin

Oct 27, 2022

2023ஆம் ஆண்டில் உலகில் குறைந்த சம்பள உயர்வை இலங்கையர்கள் பெறவுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பு ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 நாடுகள் மற்றும் நகரங்களில் உள்ள 360 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2023ஆம் ஆண்டில் உலகில் அதிக சம்பள உயர்வை வழங்கும் நாடாக இந்தியா விளங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகக் குறைந்த சம்பள உயர்வை வழங்கப் போகும் நாடுகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஐரோப்பாவிலும் குறைவான சம்பள உயர்வுகளே வழங்கப்படும் என்றும், அமெரிக்காவில் 1 சதவீத சம்பள உயர்வே இருக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் பிரித்தானியாவிலும் அடுத்த ஆண்டில் சம்பள உயர்வு வீதமானது வீழ்ச்சியடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 சம்பள உயர்வு பட்டியலின்படி வகைப்படுத்தப்பட்ட நாடுகள்

இந்தியா (4.6 சதவீதம்)
வியட்நாம் (4.0 சதவீதம்)
சீனா (3.8 சதவீதம்)
பிரேசில் (3.4 சதவீதம்)
சவுதி அரேபியா (2.3 சதவீதம்)
மலேசியா (2.2 சதவீதம்)
கம்போடியா (2.2 சதவீதம்)
தாய்லாந்து (2.2 சதவீதம்)
ஓமன் (2.0 சதவீதம்)
ரஷ்யா (1.9 சதவீதம்)
அதேநேரம் சம்பள குறைவு பட்டியலின்படி வகைப்படுத்தப்பட்ட நாடுகள்

பாகிஸ்தான் (-9.9 சதவீதம்)
கானா (-11.9 சதவீதம்)
துருக்கி (-14.4 சதவீதம்)
இலங்கை (-20.5 சதவீதம்)
ஆர்ஜென்டினா (-26.1 சதவீதம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *