• Sat. Oct 11th, 2025

மாணவிகள், இளம் பெண்கள் குறித்து வெளியாகியுள்ள கவலைமிகு தகவல்

Byadmin

Oct 30, 2022

பெண்கள் மத்தியில் ICE எனப்படும் போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தெரிவித்துள்ளது.

NDDCB உதவி ஆலோசகர் லக்மி நிலங்கா கூறுகையில், அழகு நிலையங்கள் மூலம் பல பெண்கள் மற்றும் இளம் பெண்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுப்பதற்காக குளியாப்பிட்டிய கலால் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி, தற்போது சிகிச்சை பெற்று வரும் பாடசாலை மாணவிகள் மற்றும் யுவதிகள் பலர், அழகு நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்து பயன்படுத்தக்கூடிய ICEக்கு அடிமையாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குருநாகல் மாவட்டத்தில் ICE பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *