கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் 06 மாணவி ஒருவரை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தரம் 06 இல் கல்வி கற்கும் 11 வயது மாணவனே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து கொழும்பு மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனிதாபிமானமற்ற தாக்குதலால் தமது பிள்ளை வாந்தி எடுக்க ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மாணவரின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தாக்குதல்களால் மாணவருக்கு உள் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் உரிமைகளுக்காக வாதிட்ட சட்டத்தரணி குமார வெல்கம குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு நீதவான், குறித்த சந்தேக நபரான ஆசிரியரை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.