• Tue. Oct 14th, 2025

செஸ் வரியின் படி விலை அதிகரிக்கப்படும் பொருட்கள் இதோ!

Byadmin

Nov 16, 2022


திருத்தப்பட்ட செஸ் வரி நேற்று (15) முதல் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கேற்ப, 187 HS குறியீடுகளின் கீழ் 637 பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதி அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று முன்தினம் (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி, பெறுமதி சேர் வரியை திருத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாக சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அரிசி, உருளைக்கிழங்கு, பருப்பு, வெங்காயம், பாம் எண்ணெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால், புத்தகங்கள், பேனாக்கள், காலணிகள், ரேப்பர்கள், டயர்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளன.

அதன்படி,, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 60 ரூபாவும், வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாவும், உருளைக்கிழங்கு கிலோ 220 ரூபாவும், கடலை கிலோ ஒன்றுக்கு 300 ரூபாவும், வெண்ணெய் கிலோ ஒன்றுக்கு 550 ரூபாவும் மற்றும் பாலாடைக்கட்டி கிலோவுக்கு 600 ரூபாவாலும் செஸ் வரிகள் அதிகரிக்கப்படும்.

இது தவிர, இறக்குமதி செய்யப்படும் சோளம் 300 ரூபாவாலும், அப்பிள் 380 ரூபாவாலும், பாம் எண்ணெய் 60 ரூபாவாலும், கொப்பரா 370 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் இறப்பர் மற்றும் டயர்கள் 100 முதல் 400 (100-400) ரூபா வரையிலும், பாதணிகளின் வகைக்கு ஏற்ப, 90-1840 ரூபா வரையிலும், பால்பாயின்ட் பேனாக்களின் விலை 25% வரையிலும் அதிகரிக்கப்படும்.

அதேபோல், ஒரு கிலோ பயிற்சி புத்தகங்களுக்கு 250 ரூபாயும், ரேப்பர்களுக்கு 200 ரூபாயும், மசகு எண்ணெய் கிலோவுக்கு 300 ரூபாயும் வரி விதிக்கப்படும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *