• Sun. Oct 12th, 2025

வௌிநாட்டு தபால் துறையில் வருமானம் அதிகரிப்பு

Byadmin

Nov 27, 2022


இலங்கையில் இருந்து தபால் திணைக்களத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு தபால் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதனுடன் ஒப்பிடும் போது தனியார் தூதஞ்சல் (Courier) நிறுவனங்களின் தபால் கட்டணமும் அதிக விலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தபால் திணைக்களத்தின் ஊடாக அனுப்பப்படும் பொருட்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கேற்ப வருமானம் அதிகரித்துள்ளதாகவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் தபால் பொருட்கள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *