காலி மாவட்டம், பெந்தோட்டை பிரதேச செயலகத்தில் அமைத்துள்ள, துந்துவைக் கிராமத்தில் பிறந்து, துந்துவை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி பயின்ற மொஹமட் ஷாபி பாத்திமா மஹ்ரூபா சஹீர்தீன் அவர்கள் நேற்று முன்தினம் (01.12.2022) அகில இலங்கை சமாதான நீதவானாக வத்தளை நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார். இந்த நியமனம் வெளிவிகார அமைச்சர் அலிசப்ரி அவர்களினால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வத்தலை, மாபோலையில் வசித்து வரும் இவர், மபோலை – அல் அஷ்ரபியா மாதர்சங்கத்தின் செயலாளரும், தாருல் ரஹ்மா அஹதியா பாடசாலை மற்றும் Little Pearl பாலர் பாடசாலையின் அதிபருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் – றிகாஸ்