உடல் உறுப்பு கடத்தல் குறித்து அண்மையில் அத தெரண உகுஸ்ஸாவின் ஊடக வௌியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலை குறித்து விசாரணை செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஊடாக 7 பேர் கொண்ட குழுவொன்று இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, முழுமையான விசாரணை முடியும் வரை வைத்தியசாலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான சம்பவம் தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகமும் விசாரணை நடத்தி வருகிறது.