• Mon. Oct 13th, 2025

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கான அறிவிப்பு

Byadmin

Dec 8, 2022


இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான பதிவு நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் பதிவு செய்யும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பதிவுச் செயற்பாடுகளை நிறைவு செய்ததன் பின்னர் ஏதேனும் வெற்றிடங்கள் இருப்பின் வெற்றிடமான பாடநெறிகளுக்கான மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்படும் என சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் கடந்த 02 ஆம் திகதி வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான பாடப்பிரிவுகள் குறித்து மாணவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, அதற்கான பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர்களை ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *