• Sat. Oct 25th, 2025

சட்ட விரோதமான இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

Byadmin

Dec 19, 2022

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் (18) தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் பேசாலை, வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று (18) மாலை தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு, 16 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *