• Sat. Oct 11th, 2025

சிசு ஒன்று சடலமாக மீட்பு – 15 வயது சிறுமி கைது

Byadmin

Jan 25, 2023


ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை நேற்று (24) காலையில் மீட்டதுடன் சிசிவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் சுகாதாரதுறையில் டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் அந்த பகுதியிலுள்ள வீடுகளை சோதனை நடவடிக்கைக்காக சென்ற நிலையில் புதிய காட்டுப்பள்ளி வீதியில் உள்ள 15 வயதுடைய சிறுமியின் வீட்டை சோதனை நடவடிக்கையின் போது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டதையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

கர்ப்பமாடைந்த சிறுமி பாடசாலை செல்வதை நிறுத்திய நிலையில் சம்பவதினமான நேற்று காலை 9 மணியளவில் சிறுமி தனது வீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளதையடுத்து பிறந்த சிசுவை சிறுமியின் வீட்டின் முன்னாள் உள்ள பாழடைந்த காணியில் வீசி எறிந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுமியையும் சிறுமியை கர்ப்பமாக்கிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சடலமாக மீட்ப்பட்ட சிசுவை பிரேத பரிசோதனைக்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *