சுயாதீன ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை அதிகாரிகள் அமுல்படுத்தாமை தொடர்பில் நாளை (30) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (29) மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அவர், சுயாதீன ஆணைக்குழுவின் பணி சுயாதீனமாக செயற்படுவதே தவிர அரசியல் அதிகாரத்தின் தீர்மானங்களை அமுல்படுத்துவதல்ல என தெரிவித்தார்.