• Sat. Oct 11th, 2025

துருக்கி மற்றும் சிரியா நாடுகளை நோக்கி இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களின் உதவிக் கரம்

Byadmin

Feb 22, 2023

ஐக்கிய இராஜ்ஜியம் லெஸ்டர் நகரில் அமையப்பெற்றுள்ள

 மஸ்ஜித் fபிதா ( FIDA ) நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாம் கட்ட நிவாரண உதவிகள் சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த வாரம் சென்றடைந்தது.

மத்திரமின்றி, குறித்த நிறுவனத்தினூடாக சேகரிக்கப்பட்ட மேலும் ஒரு தொகை நிவாரண உதவியானது இரண்டாம் கட்டமாக கடந்த சனிக்கிழமை துருக்கி நாட்டைப் போய்ச் சேர்ந்தது. குறித்த நிறுவனத்தின் உறுப்பினர்களில் ஒரு சாரார் சேகரிக்கப்பட்ட நிவாரண உதவிகளுடன் கடந்த வெள்ளியன்று துருக்கி சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கள விஜயங்களை மேற்கொண்டு, பயனாளர்களுக்கு சேகரிக்கப்பட்ட நிவாரணங்களை வழங்கி வைக்கின்ற உயரிய பணியில் தற்போது தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். அல்ஹம்து லில்லாஹ்.

குறித்த உதவிகளாவன, பயனாளர்களின் கரங்களைச்  சென்றவடைவதில்  இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம் சமூகம் பாரிய  பங்களிப்பைச் செய்திருந்ததுடன் fபிதா நிறுவனமானது நிவாரண உதவிகளைச் சேகரித்து,  அவற்றைத் தேவையுடையோரின் காலடிக்குக் கொன்று சேர்க்கும் உயரிய பணியைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றது.  

குறித்த உயரிய வணக்கத்தினூடாக அல்லாஹ்வின் நெருக்கம் பெற நிதி மற்றும் பொருளாதார உதவிகள் மூலம் தமது  நிறுவனத்திற்குத் தாராளமாக  பங்களிப்புகளைச் செய்திருந்த அனைத்து  நல்லுள்ளங்களுக்குக்கும் குறித்த நிறுவனத்தின் பரிபால சபை உறுப்பினரகள் தமது மனமார்ந்த நன்றிகளைத்  தெரிவித்துக் கொள்கின்றனர்.  

அன்மையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாடுகளை  நோக்கி உலகளவில் பல்வேறு அமைப்புக்களின் உதவிகளும் விரைந்து கொண்டிருக்கின்ற அதே வேலை இலங்கை நாட்டைப்   பிரதிநிதித்துவம் செய்து இங்கிலாந்தில் வசித்து வருபவர்களால் அன்மைய அனர்த்ததின் பின்பு  முதன்முதலாக கொண்டு சேர்க்கப்பட்ட நிவாரண உதவிகள் இவையாகும்.          

மஸ்ஜித் fபிதா.

லெஸ்டர், இங்கிலாந்து.

UK. 

21.02.2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *