• Sat. Apr 4th, 2026

கடவுச் சீட்டு ​பெற வருபவர்களுக்கு வழங்கப்படவுள்ள வசதி

Byadmin

Feb 25, 2023


தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்களின் வசதிக்காக, அந்த இடத்தில் இருக்கைகளை பொருத்த, நகர அபிவிருத்ததிகார சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. நிமேஷ் ஹேரத் மேற்கொண்ட கள ஆய்வுப் பயணத்தின் பின்னரே இது இடம்பெற்றது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக தினமும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.

உட்காருவதற்கு போதிய இருக்கைகள் இல்லாததால், மரங்களின் கீழ், சுவர்களுக்கு மேல், வீதிகளில் அமர்ந்து விடுகின்றனர்.

இதற்கு தீர்வாக அந்த இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *