• Sat. Oct 11th, 2025

வெளிநாட்டவர்களிடம் பணம் பிடுங்கும் தரகர்கள்! தலதா பெரஹரவில் அநீதி

Byadmin

Aug 7, 2017

கண்டி தலதா மாளிகையின் பெரஹரா நிகழ்வுகளை பார்வையிட வருகை தரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து தரகர்கள் பெரும் தொகைப்பணத்தை கொள்ளையடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி தலதா மாளிகையின் வருடாந்த ரன்தோலி பெரஹரா நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதனைப் பார்வையிட உள்நாட்டு வாசிகள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் பெரும் ஆர்வத்துடன் கண்டியில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரஹராவின் கலை நிகழ்வுகள் மற்றும் வீதி உலாவின் போது அவற்றை வசதியாக உட்கார்ந்து பார்வையிடுவதற்கான ஆசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக வெளிநாட்டவர்களிடம் இருந்து பத்தாயிரம் ரூபா வரையில் அநீதியான முறையில் தரகர்கள் கொள்ளையடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக தற்போதைக்கு பெருமளவான வெளிநாட்டவர்கள் நேர காலத்துடன் வருகை தந்து பாதையோரங்களில் பொலித்தீன் விரிப்புகளில் அமர்ந்து பெரஹரா நிகழ்வுகளை பார்வையிடத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *