• Sun. Apr 12th, 2026

QR முறை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

Byadmin

Mar 8, 2023

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR கோட்டா புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டது.

இதனால் ஏற்படும் விநியோகச் செலவைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, QR கோட்டா மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் இது தொடர்பான ட்வீட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *