• Sat. Apr 11th, 2026

இஸ்லாமிய சமுதாயத்துக்கும், திமுகவுக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது

Byadmin

Mar 11, 2023

சென்னையில் நடைபெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர்; திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது. சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வர காரணமாக உள்ளது. 

மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்; அதை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தார்கள்; மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின் மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டார் கலைஞர்: இஸ்லாமியர்கள் வேறு, தாம் வேறு என்று கலைஞர் நினைத்தது இல்லை எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *