• Sat. Apr 4th, 2026

அரை சொகுசு பேருந்துகள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

Byadmin

Apr 18, 2023


அரை சொகுசு பேருந்துகள் அடுத்த மாதத்தின் பின்னர் ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரை சொகுசு பேருந்துகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலின்படி அரை சொகுசு சேவையை சாதாரண சேவையாகவும், சொகுசு சேவையாகவும் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அனைத்து பேருந்து உரிமையாளர்களும் தங்களது பேருந்தை சாதாரண சேவையாகவோ அல்லது சொகுசு சேவையாகவோ மாற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *