• Sun. Oct 12th, 2025

குற்றவாளியானார் டிரம்ப் – 5 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் உத்தரவு

Byadmin

May 10, 2023

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேலும் 5 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் ஈ ஜீன் கரோல் என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நியுயோர்க் நகரத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் நடுவர் மன்ற விவாதத்தின் முதல் நாளில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

விசாரணையின் போது பங்கேற்காத டொனால்ட் டிரம்ப், கரோலை ஒருபோதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் அவரை அறிந்திருக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த தீர்ப்பானது அவமானம் என்று தமது சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *