• Sat. Oct 11th, 2025

கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் பிரதமர்

Byadmin

May 12, 2023

பின்லாந்து பிரதமர் சனா மரீன் மற்றும் அவரது கணவரும் விவாகரத்து பெறுவதற்கு கூட்டாக விண்ணப்பித்துள்ளனர்.

2019 ஆம் ஆணடு தனது 34 ஆவது வயதில் பின்லாந்தின் பிரதமராக சனா மரீன் பதவியேற்றார். அப்போது உலகின் மிக இளமையான பிரதமராக அவர் விளங்கினார். அதோடு பின்லாந்து வரலாற்றில் மிக இளமையான பிரதமராகவும் விளங்கினார்.

தனது காதலாரான மார்க்ஸ் ரெய்கோனெனை 2020 ஆம் ஆண்டு சனா மரீன் திருமணம் செய்தார். பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இத்திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்னரே இவர்கள் நீண்டகாலமாக இணைந்து வாழ்ந்தனர். இத்தம்பதியினருக்கு 5 வயதான ஒரு மகள் உள்ளார்.

‘நாம் இருவரும் 19 வருடங்களாக இணைந்து வாழ்ந்தோம். நாம் மிகச்சிறந்த நண்பர்களாக நீடிப்போம்’ என இருவரும் இன்ஸ்டாகிராமில் தனித்தனியாக தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நடந்த பின்லாந்துதேர்தலில் சனா மரீனின் எஸ்டிபி கட்சி தோல்வியடைந்தது. எனினும் புதிய பிரதமர் பதவியேற்கும் வரை சனா மரீன் பிரதமராக நீடிக்கிறார்.

அதேவேளை பிரதமராக பதவி வகித்த நிலையிலேயே சனா மரீன் திருமணம் செய்த நிலையில் அப்பதவியிலிருந்து விலகுவதற்குள் அவர் விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *