• Fri. Nov 28th, 2025

பாத்திமா கொலை வழக்கு – சந்தேகநபர் விளக்கமறியலில்…

Byadmin

May 15, 2023


கம்பளை பிரதேசத்தில் யுவதியொருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

24 வயதுடைய சந்தேகநபர் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட யுவதியின் சடலம் நேற்று (13) மீட்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பாத்திமா முனவுவராவின் பிரேதப் பரிசோதனை கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சிவசுப்ரமணியத்தினால் இன்று (14) மேற்கொள்ளப்பட்டது.

கழுத்தை நெரித்ததால் தான் மரணம் ஏற்பட்டதாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து தனது பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்த இந்த யுவதி, ​​6 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், அவரது கிராமத்தில் வசிக்கும் 24 வயதுடைய திருமணமான நபர் ஒருவரினால் கொலை செய்யப்பட்டு இரகசியமாக புதைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கம்பளை பொலிஸார், குறித்த பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது, ​​அவரிடம் தகாத யோசனை செய்து காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயற்சித்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

யுவதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இது குறித்து தந்தையிடம் கூறவுள்ளதாக கூறியதை தொடர்ந்து குறித்த நபர் பாத்திமாவின் கழுத்தை நெரித்துள்ளதாகவும், அதனால் யுவதி கீழே விழுந்தவுடன் அவரின் குடையால் யுவதியின் கழுத்தில் குத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *