• Fri. Nov 28th, 2025

ஏமாறாதீர்கள், ஏமாறாதீர்கள்

Byadmin

May 23, 2023

கடவுச்சீட்டு மோசடிகளை தடுப்பதற்கு திணைக்கள மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன, எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 50 பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஆகவே கடவுச்சீட்டுக்காக இடைத்தரகர்கள் மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என மக்களுக்கு அவர் அவசர எச்சரிக்கையொன்றையும் வழங்கியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *