• Fri. Nov 28th, 2025

6 வயது சிறுவனுக்கு போதைப்பொருளை கொடுத்துவிட்டு நிகழ்ந்த அக்கிரமம்

Byadmin

May 27, 2023

6 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள்  இருவரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் டி. தெனபது உத்தரவிட்டுள்ளார். 

சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் சமூக நோய்கள் மற்றும் மனநோய்களுக்கான வைத்தியசாலையில் சமர்ப்பித்து வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திவுலபிட்டிய, மில்லகஹவத்த மற்றும் பின்னலந்த வத்த பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அவரைக் கைவிட்டுச் சென்றதாகவும், அவனது தந்தை தீவிர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. பாட்டியின் பராமரிப்பிலே குறித்த சிறுவன் இருந்துள்ளார். 

இந்நிலையில், தந்தையின் நண்பர்கள் இருவரால் சிறுவன் பாலியல் வன்புணர்விற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் என திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர்கள் இருவரும் சிறுவனுக்கு போதைப்பொருள் கொடுத்து சிறுவனின் வீட்டில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாலியல் வன்புணர்விற்கு உள்ளான சிறுவன் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *