சிகிச்சைகளைப் பரிந்துரை செய்வதற்கான வீடியோ உரையாடல்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வசதி போன்ற ஆரோக்கிய விடயங்களில் நல்ல சேவைகளை வழங்கவென இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்இப்னி (Asafny)
அவசர நிலமைகளின்போது உடனடியாகப் புகார் செய்யவும், சரியான இடத்தை வந்தடையவும், விசேட தேவையுடையோருக்கு உதவிடவும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குல்லுனா அம்ன் (Kollona Amn)
பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸார் போன்றோருக்கு உடனடியாகத் தகவல்களை வழங்கும் வசதிகளை இந்த செயலி வழங்குகின்றது. குற்றச் செயல்களை வீடியோவா, படங்களாக , ஒலிப்பதிவு விளக்கங்களுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாகத் தகவல்களை இதனூடாக வழங்கிடமுடியும். மீட்பு நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த சகல வசதிகளையும் இது கொண்டிருக்கின்றது.
அல் முதவ்விப் (Al Mutawwaf)
புனித மஸ்ஜிதுல் ஹறாமின் வரைபடம், ஹஜ் உம்ரா வணக்கங்களின்போது சொல்ல வேண்டிய திக்ரு துஆக்கள், தமக்கு ஏற்படும் சந்தேகங்கள் பற்றி முப்தி ஒருவருக்கு வினாத் தொடுக்கும் வசதிபோன்ற பல அம்சங்களைக் கொண்ட மிகவும் பிரயோசனமான செயலியாக இது காணப்படுகின்றது.
நனா (Nana)
இது பொருட்களை ஒன்லைன் மூலமாக ஓடர் செய்து பெற்றுக் கொள்ள உதவும். இரைச்சி, மரக்கறி, பழவகை உள்ளிட்ட பதிமூவாயிரம் பொருட்களை ஓடர் செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹாஜி இருக்குமிடத்திற்கு பொருட்கள் கொண்டுவந்து தரப்படும்.
கரீம் (Careem)
இது வாகனங்களை முன் பதிவு செய்துகொள்வதற்கான செயலியாகும். பல்வகை வாகனங்களையும் சாரதியோடு வாடகைக்கு அமர்த்திக் கொள்வதை இலகுபடுத்தும் செயலியாக இது காண்ப்படுகின்றது.
அல்ஹரமைன் (Al Haramain)
இது இரு புனிதஸ்தலங்களின் தலமையகத்தின் சேவைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும், ஹஜ் மற்றும் உம்ரா போன்ற புனித வணக்கங்களுக்காக வருபவர்களுக்கு உயர் தொழிநுட்பவசதிகளைப் பயன்படுத்தி சேவைகள் செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டடுள்ளது.
அறபாத் சேமன் (Arafath Sermon)
அறபா தினத்தன்று அறபா பெருவெளியிலே நடாத்தப்படுகின்ற குத்பாப் பேருரையை செவிமடுக்கவும் அதனை விரும்பிய மொழியில் மொழியாக்கம் செய்து கேட்கவும் இது உதவிடும்,
இத்தனை முன்னாயத்த நடவடிக்கைகளைச் செய்யும் அன்புள்ளங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. இந்தவருடம் ஹஜ்ஜுக்காகச் சென்றிருக்கும் அனைவரது ஹஜ் வணக்கத்தை அல்லாஹ் ஏற்று அருள் புரிவானாக. ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்து ஆவலோடு காத்திருக்கும் அனைவருக்கும ;ஹஜ் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் அருளுவானாக.
மூலம்: ஹஜ் அமைச்சின் இணையதளம்