• Sun. Oct 12th, 2025

வைரலாகும் எலான் மஸ்க்கின் குழந்தை பருவ புகைப்படம்

Byadmin

Jul 12, 2023

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் சமூக வலைத்தளத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர்.

இந்நிலையில் எலான் மஸ்க்கின் குழந்தை பருவ புகைப்படத்தை டுவிட்டரில் கே10 என்ற பெயரில் ஒரு பயனர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் மஸ்க் சிரித்துக் கொண்டிருக்கிறார். கார் பாகங்களில் கண்டுபிடிப்பாளராகி, செவ்வாய் கிரகத்தை இலக்காகக் கொண்டு, எலக்ட்ரிக் கார்களை உலகெங்கிலும் உள்ள சாலைகளில் தினமும் காணக்கூடியதாக மாற்றும் குழந்தை எலான் பேபி என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த புகைப்படம் டுவிட்டரில் வைரலாக பரவியது.

இதைப்பார்த்த மஸ்க், நான் பைத்தியக்காரத்தனமாக தெரிகிறேன் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். படத்தை பார்த்த பயனர்கள் அர்ப்பணிப்பானவர், புத்திசாலி என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *