• Sat. Apr 4th, 2026

இனவாத தீயில் நாட்டை கொளுத்துவதை நிறுத்த வேண்டும்

Byadmin

Aug 16, 2017

இனவாதம், மத வாதங்களை தூண்டி நாட்டை தீயிட்டு கொளுத்துவதை தற்போதாவது நிறுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளை ஹலி-எல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சிங்கள பௌத்த முத்திரையை குத்திக்கொண்டு மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் திருந்துவதற்கான சிறந்த இடம் ஹாலி-எல பிரதேசம்.

குறைந்தது ஹாலி-எல பிரதேசத்தில் ஊடாக தேசிய ஐக்கியத்தை கற்பிக்க வேண்டும்.

யார் எதிர்த்தாலும் 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு இருக்கும் அதிகாரங்களை வழங்க வேண்டியது கட்டாயம்.

இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். அதேபோல் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடபகுதி மக்களுக்கு கூறிவரும் பொய்களை நிறுத்த வேண்டும்.

இதேவேளை, வாக்குகளை பெறுவதற்காக விக்னேஸ்வரன் இனவாதத்தை பரப்பி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *