• Tue. Oct 14th, 2025

பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 76வது ஆண்டு விழா, இலங்கையில் கொண்டாடப்பட்டது

Byadmin

Aug 14, 2023

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான, ஆற்றல்மிக்க, முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 76வது ஆண்டு  விழாவை கொண்டாடியது.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி அவர்கள் பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் வேளையில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் விசேட செய்திகள் வாசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி ” எங்கள் சுதந்திரத்தை கொண்டாடுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக இலங்கைக்கு நன்றி தெரிவிக்கிறோம். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிணைப்பானது வரலாற்றில் ஆழமானது.முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் இப்படிப்பட்ட உறுதியான நண்பனைப் பெற்றிருப்பதற்கு நாம் உண்மையிலேயே பாக்கியவான்கள். இருதரப்பு மட்டத்தில், நமது இராஜதந்திர பாதுகாப்பு மற்றும் கலாச்சார உறவுகளை தொடர்ந்து வளர்த்து வரும் அதே வேளையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் வர்த்தகம் மற்றும் இருதரப்பு முதலீட்டை மேம்படுத்துவதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார இணைப்புகளை விரிவுபடுத்தவும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

இராஜதந்திர உறுப்பினர்கள், பாகிஸ்தான் சமூகத்தினர், உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர், உள்ளூர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *