• Thu. Oct 16th, 2025

நாம் தொழும் போது…

Byadmin

Aug 15, 2023

மண்டை ஓட்டின் உள்ளே இருக்கும் நமது மூளையின் சராசரி எடை 1700 கிராம், அதாவது (2 கிலோவுக்கு சற்று குறைவு) ஆகும். 

ஆனாலும் நாம் ஏன் இவ்வளவு பெரிய எடையை நமது தலையில் சுமந்திருப்பதாக உணருவதில்லை, தெரியுமா?

வாருங்கள், தெரிந்துகொள்வோம்!

நமது மூளையானது (செரிப்ரோஸ்பைனல்) எனப்படும் மூளை தண்டுவட திரவத்தால் சூழப்பட்டு அதனுள் பாதுகாப்பாகவும் ஆரோக்கிமாகவும் மிதந்து கொண்டிருக்கிறது.

மேலும் இயற்பியல் கூற்றுப்படி  ஒரு திரவத்தில் மூழ்கிய ஒவ்வொரு பொருளும், அதன் அசல் கனதியை இழந்து, அது சூழ்ந்துள்ள திரவத்தின் எடைக்கு சமமான எடையாக மாற்றம் பெற்றுவிடுகிறது. 

அதனால் நாம் சுமக்கும் மூளையின் எடை வெறும் 50 கிராம் எடையாக மாறிவிடுகிறது. 

இது படைத்தவன் ஏற்படுத்திய அற்புதமான ஏற்பாடுகளில் ஒன்றாகும். நாம் அன்றாடம் தொழுகையில் சிரம் பணியும் போது இந்த திரவம் மேலும் கீழும் நகருவதால் நமது மூளைக்கு ஒரு வகையான மசாஜ் கிடைத்து விடுகிறது. அதனால் நாம் தொழும் போது  உளவியல் ஆறுதலோடு உடலியல் ஆரோக்கியத்தையும் அடைந்து கொள்கிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *