• Sat. Oct 11th, 2025

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்…போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர் ரஃபேல் ஓஜைக்.

Byadmin

Aug 28, 2023

போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர் ரஃபேல் ஓஜைக். போலந்து நாட்டில் பிறக்கிறார். பிரிட்டனில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக செயல்பட்டு வந்தார். இனி அவர் சொல்வதைக் கேட்போம்.

‘ஒரு நாள் இரவு எனது அறையில் தனியாக இருந்தேன். ஏதோ காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அறையின் வெளிச்சத்திற்காக ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினேன். நேரம் போவதற்கு எதையாவது படிக்கலாம் என்று எண்ணினேன். அப்போது பல்கலைக் கழகத்திலிருந்து கொண்டு வந்த மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் ஒன்று எனது அருகில் இருந்தது. 

சில அத்தியாயங்களை படிக்கத் துவங்கினேன். அந்த வசனங்கள் என்னை பலமாக சிந்திக்கத் தூண்டியது. திடீரென மொழுகுத் திரி அணைந்தது. அறை எங்கும் ஒரே இருட்டு. எனக்குள் இனம் புரியாத ஒரு பயம் ஏற்பட்டது. இதற்கு முன் இவ்வாறு எனக்குள் ஏற்பட்டதே இல்லை. என் கை கால்கள் சிறிது நேரம் உறைந்து விட்டன. மெழுகுத் திரியை திரும்பவும் ஏற்றினேன். அப்போது குர்ஆனில் குறிப்பிட்ட அந்த பகுதியை திருமப்வும் படித்தேன்.

 ‘வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் …….விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *