2022ஆம் ஆண்டு, பிபா உலகக் திண்னக் கால்பந்துத் தொடர் கட்டாரில் நடைபெறவுள்ளது.
தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கட்டார் உடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன.
இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது.
இது ஒருபுறமிருக்க, எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவி
ருக்கும் பிபா உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடருக்கான முன்னேற் பாடுகளை கட்டார் நாடு தொடங்கியுள்ளது.
அதன் ஒருபகுதியாக, தொப்பி வடிவிலான கால்பந்து மைதானத்தை அமைக்க இருப்பதாக கட்டார் அறிவித்துள்ளது.
தலைநகர் டோஹாவில் அமைக்கப்படவிருக்கும் அல் – துமாமா மைதானம், பாரம்பரிய காஃபியா எனப்படும் அரேபியத் தொப்பி வடிவில் அமைய
இருக்கிறது.
40,000 பேர் வரை அமரக்கூ டிய வகையில் உருவாக இருக்கும் இந்த மைதானம், கட்டாரைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் சின்னமாக இந்த மைதானத்தை அரேபியத் தொப்பி வடிவில் அமைக்க இருப்பதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஹஸன் அல் தவாடி தெரிவித்துள்ளார்.