• Sun. Oct 12th, 2025

இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரே நாளில் செலுத்துவேன்! கோடீஸ்வரர் ஒருவர் அதிரடி

Byadmin

Aug 22, 2017

இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரே நாளில் செலுத்துவேன் என எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகும் கோடீஸ்வரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Toyota, Honda, Volvo, BMW, Aston Martin, Opel, போன்ற பல வாகனங்களின் சென்சார் உற்பத்தி செய்கின்ற இலங்கை தொழிற்சாலையின் உரிமையாளரான ரொஹான் பல்லேவத்த என்பவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற தான் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்றால் இலங்கையின் மொத்த கடனையும் ஓரே நாளில் செலுத்தி விடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மாத்திரமின்றி உலக அமைப்புகள் பலவற்றில் இலங்கை கடன் பெற்றுள்ளது.

பிறக்கும் குழந்தைகள் உட்பட நாட்டிலுள்ள அனைவரும் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் திணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கோடிஸ்வரர் குறிப்பிட்ட விடயம் நடந்தால் நன்மையாக இருக்கும் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *